articles

சேரிக்கார மாமா

சேரிக்கார மாமா -நான்  ஊருக்காரி ஆமா! -உன் மேள இசை கேட்டு  நெஞ்சில் தேனூத்து!      

     மேனி சிலிர்க்குதய்யா - இந்த          ராணி உனக்குத்தான்யா!        (சேரிக்)  மலைய தோளு மேல் தூக்கி வச்சாப் போல - சாக்குச் சுமைய தூக்குவ நீ உன் தலைக்கு மேல!  

     என்னையும் தூக்கு !        ஏங்குது நாக்கு அப்படியே உன்னை சாப்பிட! அனுமதி மச்சான்னு கூப்பிட!-நான்        

அழகான.... அல்வாக்கட...        (சேரிக்)  கரும்பு வெட்டுற கட்டழகா உன்ன- எவனும் முந்த முடியாது தங்குவானே பின்ன!      

 கரும்பு தான் ருசியா ?        கன்னி நான் ருசியா? ஆராய்ஞ்சு பார்க்க நீ வாரியா? ஊருக்கு இளைச்சது சேரியா?        இல்லைன்னுநீ.... காட்டுமையா!....

    (சேரிக்)  கூத்து தெருக்கூத்து பெண் வேஷம் நீ கட்டினா பாத்து ஆண்எல்லாம் சுத்துவானே மொத்தமா!      

 பொம்பள வேஷம்          போட்டு வா நாமும் ஒன்னு சேர்ந்து ஓடிப் போலாம் மாப்பிள! அஞ்சாங்கல் ஆடலாம் தோப்புல!    

   சிரிச்சுக்கலாம்... சேர்ந்தாப்புல...!    (சேரிக்)  ஆறாளு வேலைய ஓராளா நீயே செய்வ!- என் ஆம்படையான் ஆனாக்க அப்ப நீ என்ன செய்வ?        

முந்தான தீண்டவே        தந்தான பாடுவ! தந்தி அடிக்கும் உந்தன் காலையா! சாணாக் குறுவது ஏனையா?        சரசத்தில் நீ.... சப்பாணியா..?    (சேரிக்)